Main Menu

சவுதி அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு ஐ.நா பாராட்டு!

சவுதி அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளது.

ஏமன் அரசாங்கத்திற்கும், தென் பகுதியிலுள்ள பிரிவினைவாதிகளுக்கும் இடையே சவுதி தலைமையில் அமைதிக்கான ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனில் நான்கு ஆண்டுகளாகத் தொடரும் போருக்கு அரசியல் ரீதியாக முக்கியத் தீர்வாக இந்த ஒப்பந்தம் காணப்படுகின்றது.

இந்த ஒப்பந்தம் மூலம் ஏமனில் புதிய சூழல் உருவாகும். மேலும், சவுதி அரேபியா உங்களுடன் துணை நிற்கும் என்று சவுதி இளவரசர் முகமது சல்மான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஏமனில் தென் பகுதி பிரிவினைவாதிகளுக்கும் ஏமன் அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்காக சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளது.

ஏமனுக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி மார்ட்டின், சவுதி இளவரசர் சல்மானை சந்தித்து இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஒப்பந்தம் மூலம் ஏமனில் நடைபெறும் போர் முடிவுக்கு வரும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...