Main Menu

அயர்லாந்தில் பாடசாலைகள், கல்லூரிகள், பொது வசதிகள் மூடப் படுகின்றன

கொரோனா வைரஸ் பரவுவதையடுத்து அயர்லாந்துக் குடியரசில் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பொது வசதிகள் மூடப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் மார்ச் 29 ஆம் திகதி வரை நடைமுறைக்கு வரும் என்று ஐரிஷ் பிரதமர் லியோ வராட்கர் (Leo Varadkar) தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு நிலையங்கள் நாளை வெள்ளிக்கிழமை முதல் மூடப்படும் என்று பிரதமர் கூறினார்.

100 க்கும் மேற்பட்டவர்களின் உள்ளக ஒன்றுகூடல்களும் 500 க்கும் மேற்பட்டவர்களின் வெளிப்புற ஒன்றுகூடல்களும் ரத்துச் செய்யப்படவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் விவேகமான அணுகுமுறையை எடுக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் திறந்திருக்கும் என்று ஐரிஷ் துணைப் பிரதமர் சைமன் கோவ்னி (Simon Coveney) கூறினார்.

தொலைதூரத்தில் உள்ளவர்கள் தமது இடங்களில் இருந்தவாறே வேலை செய்யவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் மரணம் அயர்லாந்து குடியரசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றுப் புதன்கிழமை வயதான பெண் டப்ளின் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நன்றி news.sky.com

பகிரவும்...