Main Menu

ஆசிரியர்கள் தொலைக்கல்வித் திட்டங்களை தயார் செய்கின்றனர்

கொரோனா வைரஸ் காரணமாக பாடசாலைகள் மூடப்படக்கூடும் என்பதால் ஆசிரியர்கள் தொலைக்கல்வித் திட்டங்களை தயார் செய்ஆசிரியர்கள் தொலைக்கல்வித் திட்டங்களை தயார் செய்கின்றனர்

கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்ததையடுத்து பிரித்தானியா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசாங்கத்தின் அடுத்த நடவடிக்கையாக பாடசாலைகள் மூடப்படலாம் என்று கருதப்படுகின்றது. இதனால் ஆசிரியர்கள் அடுத்த வாரம் முதல் தொலைக்கல்வி வகுப்புகளை ஆரம்பிக்கத் தயாராகி வருகின்றனர்.

வீட்டில் உள்ள இணைய வழிகள் மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தொலைபேசி வழியாகவும் கூட சிறுவர்கள் தொலைக்கல்வி வழிகாட்டுதல்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

அரசாங்கத்தின் அறிவிப்பு இன்று வெளியாகுமானால் பாடசாலைகள் ஈஸ்ரர் விடுமுறைக்கு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்துக்கு முன்னரே மூடப்படலாம்.

இத்தாலி போன்று நாட்டினை முடக்குவதற்காக ஏராளமான பணியிடங்கள் மற்றும் அலுவலகங்கள் தயாராகி வருகின்றன. பல பிரித்தானியர்களுக்கு ஏற்கனவே வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கூறப்பட்டுள்ளது.

நன்றி thesun.co.uk

பகிரவும்...