Main Menu

70 வீதமானவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை!

ஜேர்மனியின் சனத்தொகையில் 70 வீதமானவர்கள் பாதிக்கப்படலாம் என ஜேர்மனியின் சான்சிலர் அஞ்சலா மேர்கல் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சருடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸினை குணப்படுத்துவதற்கான வழிவகை எதுவும் இல்லாததன் காரணமாக வைரஸ் பரவுவம் வேகத்தை குறைப்பது குறித்தே கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், காலத்துடன் போட்டிபோட்டு வெல்வதை பற்றியது இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனியில் மூன்றாவது நபர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜேர்மனியில் இதுவரை ஆயிரத்து 296 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்படாத நோயாளிகள் பெருமளவில் காணப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...