கிளிநொச்சி மலையாளபுரத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.
போரால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு பிரான்ஸ்ஸைச் சேர்ந்த பத்திநாதன் கத்தரினாள் அவர்களின் நிதிப்பங்களிப்புடன் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணி பிரிவின் ஒழுங்கமைப்பில், 03.01.2016 அன்று, கிளிநொச்சி மலையாளபுரத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்சிவசக்திஆனந்தன், வல்வெட்டித்துறை நகரசபையின்முன்னாள் தவிசாளர் அனந்தராஜ், வலி.கிழக்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் (ரமேஸ்) சுவிஸ் அன்பே சிவம் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் குமணன், மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்