Main Menu

ஒலுமடுவில் பொங்கல் விழாவும், மாணவர்கள் கௌரவிப்பும் – அனுசரணை ரி.ஆர்.ரி வானொலி

வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு அ.த.க.பாடசாலையில் தைப்பொங்கல் விழாவும், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள் கௌரவிப்பும் பாடசாலை அதிபர் திரு.விமலேந்திரன் தலைமையில் 18.01.2015 அன்று நடைபெற்றது.

மருதோடை கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் தங்கராசா ஜெயந்தனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா வடக்கு பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர்களான பூபாலசிங்கம், மகாலிங்கம், செந்தூரன் இவர்களுடன் வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் முன்னாள் தலைவர் தேவராசா, ஆசிரிய ஆலோசகர் அமலேஸ் ஆகியோரும் கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்தனர்.

இதன்போது அயல் பாடசாலைகளான சேனைப்பிலவு உமையாள் வித்தியாலயம், பட்டிக்குடியிருப்பு அ.த.க.பாடசாலை, மருதோடை அ.த.க.பாடசாலை ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டு, அவர்களுக்கு புத்தகப்பைகளும், அப்பியாசக்கொப்பிகளும் வழங்கப்பட்டன.

இதற்கான நிதியுதவியை பிரான்ஸ் அன்ரி அம்மா பிள்ளைகள், லண்டனைச் சேர்ந்த டொக்டர் ரவி புஸ்பவதி ஆகிய புலம்பெயர்வாழ் உறவுகள் பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணிக்கு பொறுப்பான திரவியநாதன் ஐயா அவர்களின் ஏற்பாட்டில் வழங்கி உதவியிருந்தனர்.

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய இரு குடும்பத்தினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும், நிகழ்வில் கலந்து கொண்ட பிரதிநிதிகளும், பாடசாலை கல்விச்சமுகத்தினரும் தமது நன்றிகளை தெரிவித்தனர்.

?????????????

?????????????
?????????????

?????????????

?????????????

?????????????

?????????????

?????????????

?????????????

?????????????
?????????????

?????????????

 

பகிரவும்...