லண்டனைச்சேர்ந்த டொக்டர் ரவி செல்வறஞ்சினி தம்பதிகளின் புதல்வன் சஞ்சீவனின் 30வது பிறந்தநாளை முன்னிட்டு
லண்டனைச்சேர்ந்த டொக்டர் ரவி செல்வறஞ்சினி தம்பதிகளின் புதல்வன் சஞ்சீவனின் 30வது பிறந்தநாளை முன்னிட்டு 30.12.2015 அன்று வவுனியா இராசேந்திரகுளம், பாரதிபுரம் கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வழங்கி வைத்தார்.
மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களுக்கான நிதியுதவியை ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணி பிரிவுக்கு பொறுப்பான திரு.திரவியநாதன் ஐயாவின் ஊடாக வழங்கிய டொக்டர் ரவி குடும்பத்தினருக்கும், ரி.ஆர்.ரி வானொலி நிறுவனத்தினருக்கும் இரு கிராமங்களின் மக்களும் தமது நன்றியை தெரிவித்ததோடு, சஞ்சீவனுக்கும் தமது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
டொக்டர் ரவி குடும்பத்தினர் பல தடவைகள் ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணி பிரிவுக்கு பொறுப்பான திரு.திரவியநாதன் ஐயாவின் ஊடாக, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வாழ்வாதாரம் தொடர்பான உதவிகளை வழங்கியுள்ளார் என்பதை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் நன்றியுணர்வோடு நினைவு கூர்ந்தார்.