மே தின பூங்காவில் சிவப்பு நிற உடையணிந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மரியாதை
தொழிலாளர் தினமான இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. பேரவை சார்பில் மே தின விழா, மே தின பூங்காவில் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவப்பு நிற உடை அணிந்து கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பகிரவும்...