மடகஸ்காரை தாக்கிய புயல் : 27,000 பேர் இடம்பெயர்வு
மடகஸ்காரின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 250கிமீ வேகத்தில் காற்று வீசியதால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கிட்டத்தட்ட 27,000 பேர் தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாக நாட்டின் பேரிடர் மீட்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை வீடுகள் இடிந்து விழுந்ததோடு மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம் தென்னாப்பிரிக்க தீவு நாட்டை அனா புயல் தாக்கியதில் பரவலான அழிவை ஏற்படுத்தியதோடு 55 பேர் உயிரிழந்தனர்.