பெய்ஜிங்கில் உணவு- பொதிகள் சேவை ஊழியர்களுக்கு நியூக்ளிக் அமில சோதனை!
சீன தலைநகரில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் பெய்ஜிங் அதிகாரிகள், அனைத்து உணவு மற்றும் பொதிகள் சேவை (couriers) ஊழியர்களுக்கு நியூக்ளிக் அமில (Nucleic acid) சோதனைகளை மேற்கொண்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
உணவு விநியோக நிறுவனமான மீதுவான் டயான்பிங் அதன் பெய்ஜிங் விநியோக ஊழியர்கள் அனைவரையும் சோதனை செய்வதாகவும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பிரவேசவங்களை மேற்கொண்டவர்கள் தற்காலிகமாக கடமையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
அத்துடன், அவர்கள் அனைவரும் நியூக்ளிக் அமில சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் உறுதிப்படுத்தியது.
சீனாவின் இரண்டாவது பெரிய பொதிகள் சேவை நிறுவனமான எஸ்.எஃப். எக்ஸ்பிரஸ், நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை தொழிலாளர்களை சோதனைக்கு உட்படுத்தப்படுத்தியதாக தெரிவித்துள்ளது.
அடுத்த வாரத்திற்குள் நகரத்தில் உள்ள அனைத்து பொதிகள் சேவைகளும் சோதிக்கப்படும் என்று பெய்ஜிங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
56 நாட்களுக்கு பிறகு கடந்த 13ஆம் திகதி, பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் அடையாளங் காணப்பட்டதை தொடர்ந்து, அங்குள்ள சில பகுதிகள் முடக்கப்பட்டன. இது பெய்ஜிங் நகரத்தின் மிகப்பெரிய மொத்த உணவு சந்தையான ஜின்ஃபாடியையும் மூடுவதற்கு வழிவகுத்தது.