புர்கினா பாசோவின் ஜனாதிபதி தேர்தலில் ரோச் கபோர் மீண்டும் வெற்றி!
புர்கினா பாசோவின் ஜனாதிபதி தேர்தலில் தேசிய சுயாதீன தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஆரம்ப முடிவுகளின்படி, ஜனாதிபதி ரோச் கபோர் மீண்டும் தலைவராகத் தெரிவாகியுள்ளார்.
இந்நிலையில், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு புர்கினா பாசோவின் தலைவராக அவர் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கபோர், 57.87 சதவீத வாக்குகளைப் பெற்று ஆரம்பக்கட்ட தேர்தல் முடிவில் வென்றுள்ளதாக தேர்தல் ஆணையகத்தின் தலைவர் நியூட்டன் அகமது பாரி இன்று அறிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகத் தெரிவாகியு கபோருக்கும் அவருக்கு எதிராக 12 போட்டியாளர்களுக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது.
இதேவேளை, மேற்கு ஆபிரிக்காவின் சஹேலில் அதிகரித்துவரும் பாதுகாப்பு நிலைமைக்கு மத்தியில் புர்கினா பாசோவின் பரந்த பகுதிகளில் செயற்படட்டுவரும் அல்-குவைதா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுக்களால் தேர்தல் வாக்களிப்பு பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு, இந்த மோதலில் புர்கினா பாசோவில் சுமார் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புர்கினாபே மக்கள் சண்டையால் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.
இந்த சூழலிலும், கபோர் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் வாக்காளர்களில் 1.6 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...