Day: November 27, 2020
மாவீரர் நாள்: தமிழர் இல்லங்களில் உருக்கமாக நினைவுகூரப்பட்டது!
தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாளில் தமிழ் மக்கள் இல்லங்களில் விளக்கேற்றி உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவுகூரலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களின் இல்லங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 06:05மணிக்குமேலும் படிக்க...
முல்லைத்தீவில் மூடப்பட்ட கடைகளை திறக்கும் நடவடிக்கையில் இராணுவம்
மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர் மற்றும் புதுக்குடியிருப்பு நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) வணிக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக மக்களால் அனுஷ்ட்டிக்கபட்டு வருகின்றது. இந்நிலையில் மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களை உடனடியாக திறக்குமாறு வலியுறுத்தி, பலவந்தமாகமேலும் படிக்க...
காணாமல் போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப் பட்டவர்களின் பட்டியல் வெளியீடு
காணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலொன்றை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் வெளியிட்டுள்ளது. குறித்த விபரங்களை கொழும்பிலுள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், மன்னார் மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்களில் பார்வையிட முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கு நேரடியாக கிடைத்த முறைப்பாடுகள்,மேலும் படிக்க...
இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் தமிழீழ மாவீரர் நாள்
தமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 56ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 56ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 56ஆயிரத்து 553பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், 15இலட்சத்து 57ஆயிரத்து 007பேர்மேலும் படிக்க...
புர்கினா பாசோவின் ஜனாதிபதி தேர்தலில் ரோச் கபோர் மீண்டும் வெற்றி!
புர்கினா பாசோவின் ஜனாதிபதி தேர்தலில் தேசிய சுயாதீன தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஆரம்ப முடிவுகளின்படி, ஜனாதிபதி ரோச் கபோர் மீண்டும் தலைவராகத் தெரிவாகியுள்ளார். இந்நிலையில், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு புர்கினா பாசோவின் தலைவராக அவர் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கபோர், 57.87மேலும் படிக்க...
விடுமுறைக் காலங்களில் பயணங்களை மட்டுப் படுத்துமாறு மருத்துவர் தெரசா டாம் கோரிக்கை!
விடுமுறைக் காலம் நெருங்கி வரவிருப்பதால் கனடியர்களை தங்கள் குறுகிய வேலைப் பயணங்கள் மற்றும் இன்பப் பயணங்களை மட்டுப்படுத்துமாறு மருத்துவர் தெரசா டாம் கோரிக்கை விடுத்துள்ளார். கனடாவின் பல பகுதிகளில் பலப்படுத்தப்பட்ட பொதுச் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து நேற்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை ஒடுக்க புதிய சட்டத்தை கையிலெடுத்த தாய்லாந்து பொலிஸார்!
மன்னராட்சியை முடிவுக்கு கொண்டுவரும் போராட்டத்தில் தீவிரம் காட்டிவரும் மாணவர்களை, ஒடுக்குவதற்கான பிரம்மாஸ்திரமாக தாய்லாந்து பொலிஸார், ‘லெஸ் மஜாஸ்ட்டே’ எனும் சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். லெஸ் மஜாஸ்ட்டே எனும் இந்த சட்டத்தின்படி அரச குடும்பத்தை எதிர்த்து யார் எந்த கருத்தை சொன்னாலும், அவர்களுக்குமேலும் படிக்க...
விவசாயிகள் போச்சுவார்த்தை நடத்த வர வேண்டும் – ராஜ்நாத் சிங் அழைப்பு!
போராட்டத்தைக் கைவிட்டுவிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி விவசாயிகளுக்குப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “ ஒரு விவசாயிமேலும் படிக்க...
நாடு திரும்பியவர்களை தனிமைப் படுத்தல் நிலையத்திற்கு அழைத்து சென்ற சொகுசு பேருந்து விபத்து: 17 பேர் காயம்
ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை யாழ்ப்பாணம் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஏற்றிவந்த சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, கிளிநொச்சி, பளை- ஆனைவிழுந்தான் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...
இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால்!
இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கிடையில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற இருக்கின்றது. குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காகவே அஜித் டோவால், இன்று இலங்கைக்கு விஜயம்மேலும் படிக்க...
மும்பை தாக்குதல் ஏற்படுத்திய காயத்தை இந்தியா ஒருநாளும் மறக்காது – மோடி
மும்பை தாக்குதல் ஏற்படுத்திய காயத்தை இந்தியா ஒருநாளும் மறக்காது. அந்தத் தாக்குதலின் விளைவு இந்தியா இன்று புதிய கொள்கைகளை வகுத்து பயங்கரவாதத்தைத் திறம்பட எதிர்கொள்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் மீண்டும் மும்பை தாக்குதல் நடைபெறாத வகையில் பாதுகாத்துமேலும் படிக்க...
கஜேந்திரகுமாருக்கு எதிராக வி.மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் இந்த வழக்கை தன் சார்பில்மேலும் படிக்க...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியவர்கள் கைது
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி, முகநூல் ஊடாக பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு முகநூல் ஊடாக பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்களை கைதுசெய்யும்மேலும் படிக்க...
புதிய பொலிஸ்மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்
இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபரரக நியமிக்கப்பட்ட சந்தன விக்கிரமரத்ன சற்றுமுன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றார். பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார். இதுவரை, பதில் பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட இவரின் பெயர் கடந்தமேலும் படிக்க...