Main Menu

பிரெஞ்சு திரைப்பட நடிகர் Alain Delon மரணம்

பிரெஞ்சு பொற்கால சினிமாவின் அடையாளமாக திகழ்ந்த நடிகர் Alain Delon, அவரது 88 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

ஓகஸ்ட் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவர் இயற்கை மரணம் எய்தியதாக அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டனர். Sceaux (Hauts-de-Seine) நகரில் 1935 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் திகதி பிறந்த அவர், பிரெஞ்சு திரைப்படங்களில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், பாடகராகவும் பல்வேறு பரிமானங்களில் செயற்பட்டார்.

பிரெஞ்சு மக்களின் அபிமானம் பெற்ற நடிகராகவும், பல முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தவரும், பிரான்சின் அடையாளமாகும் திகழ்பவரான இவர் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு புகழ்பெற்ற விருதுகளை வாங்கி குவித்தவராவார்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அஞ்சலி வெளியிட்டுள்ளார். அவர் நடித்த பல்வேறு கதாப்பாத்திரஙக்ளை குறிப்பிட்டு, அதுபோன்ற மறக்க முடியாத கதாப்பாத்திரங்களில் நடித்து பிரான்சை பெருமைப்பட வைத்தவர் என அவரது அஞ்சலி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.