Main Menu

பிரான்ஸ்: 3மில்லியன் குடும்பங்களுக்கு பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு

பிரான்சில் விடுமுறை காலம் நிறைவடைந்து செப்டம்பரில் புதிய கல்வி ஆண்டில் பாடசாலைக்கு திரும்பும் மாணவர்களுக்கான கொடுப்பனவு (L’allocation de rentrée scolaire) நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட உள்ளது.

3 மில்லியன் குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. 6 தொடக்கம் 10 வயது வரையுள்ள பிள்ளைகளுக்கு €416.40 யூரோக்களும், 11 தொடக்கம் 14 வயதுடைய பிள்ளைகளுக்கு €439.38 யூரோக்களும், 15 தொடக்கம் 18 வயதுவரையுள்ள பிள்ளைகளுக்கு €454.60 யூரோக்களும் வழங்கப்பட உள்ளது.

இந்த தொகையானது சென்ற கல்வி ஆண்டின் போது வழங்கப்பட்ட தொகையை விட 4.6% சதவீதம் அதிகமாகும். நாளை ஓகஸ்ட் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்த தொகை குறித்த 3 மில்லியன் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.