பிரித்தானியாவின் ராணி கமீலா , பிரிஜித் மக்ரோன் சந்திப்பு
![](http://www.trttamilolli.com/wp-content/uploads/2024/12/La-reine-Camilla-et-Brigitte-Macron-un-tandem-complice-en-Normandie-900x450.jpg)
பிரித்தானியாவின் ராணி கமீலா , பிரான்சின் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் நேற்று புதன்கிழமை சந்தித்து உரையாடினார். லண்டனில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றது.
பிரான்ஸ்-பிரித்தானியா இணைந்து வழங்கும் இலக்கிய விருது வழங்கும் விழாவில் வைத்து இருவரும் சந்தித்துக்கொண்டனர். இருவரும் தனியாக 15 நிமிடங்களுக்கு மேலாக கதைத்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிஜித் மக்ரோன் புத்தகம் ஒன்றை கமீலாவிடம் வழங்கியதாகவும், நோர்து-டேம் தேவாலயத்தின் திருத்தப்பணிகள் தொடர்பான புத்தகம் அது எனவும் தெரிவிக்கப்பட்டுகிறது.
ராணி கமீலாவுக்கு அண்மைய நாட்களில் உடலநலக்குறைவில் இருந்தமையும், பிரான்சில் அரசியல் தடுமாற்றம் உள்ள பின்னணியிலும் அமைதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பகிரவும்...