Main Menu

பாப்பரசராக தெரிவு செய்யப்பட்ட 14 ஆம் சிங்கராயர் முதல் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார்

வத்திகானில் ஞாயிற்றுக்கிழமை (18) இலட்சக்கணக்கானோர் முன்னிலையில், புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்பட்ட 14 ஆம் சிங்கராயர் முதலாவது திருபு்பலியை ஒப்புக்கொடுத்தார். இதன் போது பாப்பரசருக்குரிய இறையியல் ஊழியத்தின் நியாயத்தன்மையை குறிக்கும் இலச்சினையான ஆழி (மோதிரம் ) அணிவிக்கப்பட்டது.

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்.

அதன் பின்னர் புதிய பாப்பரசராக அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் ரொபர்ட் பிரெவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டார்.

இதன்மூலம் அமெரிக்காவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதல் பாப்பரசர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இந்நிலையில், வத்திக்கான் நகரில் இலட்சக்கணக்கானோர் முன்னிலையில் புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்பட்ட கர்தினால் ரொபர்ட் பிரெவோஸ்ட், 14 ஆம் லியோ என்ற பெயரை தனக்குரிய பாப்பரசர் பெயரை தெரிவு செய்து முதல் திருப்பலியை நிறைவேற்றினார்.

அவரின் அதிகாரத்தை குறிக்கும் வகையில் ஆழி ( மோதிரம் ) அணிவிக்கப்பட்டது. இதன் போது பாப்பரசர் 14 ஆம் சிங்கராயர் காசா, உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

இந் நிகழ்வில், அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பகிரவும்...
0Shares