பரண்நட்டகல்லில் “பெரிய ஐயா” முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா பரண்நட்டகல்லு கிராமத்தில் பிரான்ஸ் தமிழ் ஒலி வானொலியின் (ரி.ஆர்.ரி) சமுகப்பணி பிரிவின் ஊடாக நான்கு இலட்சம் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட “பெரிய ஐயா” முன்பள்ளி, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தனால் 27.12.2015 அன்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
பரண்நட்டகல்லு கிராம சேவையாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பாரியார் அருந்ததி சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ம.தியாகராசா, இ.இந்திரராசா, வவுனியா வடக்கு முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.ராஜேஸ்வரன், முன்னாள் கல்வியல் கல்லூரியின் பீடாதிபதி திரு.பேனாட், குருமன்காடு பலநோக்கு கூட்டுறவுச்சங்க முகாமையாளர் சிவராசா, மற்றும் பரண்நட்டகல்லு மாதர் அபிவிருத்திச்சங்க தலைவி பவானி, முன்பள்ளி மழலைகள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த முன்பள்ளி நிர்மாணிப்புக்காக நிதியுதவி வழங்கிய அன்ரி அம்மா குடும்பம், பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கும், நிதியுதவியை ஒழுங்கமைத்து உதவிய பிரான்ஸ் தமிழ் ஒலி வானொலிக்கும், அதன் சமுகப்பணி பிரிவுக்கு பொறுப்பான திரு.திரவியநாதன் ஐயாவுக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்களும், கிராம மக்களும் தமது நன்றியை தெரிவித்தனர்.