தீவிரவாதத்தை தடுக்க சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை
தீவிரவாத வன்முறைகளை தடுக்கும் நோக்கில் புதிய முன்மொழிவொன்றை சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் முன்வைத்துள்ளது.
நாட்டிற்கு அச்சுறுத்தலாக செயற்படும் சிறுவர்கள் உள்ளிட்ட அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவே முன்வைக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து அரசாங்கத்தினால் நேற்று (புதன்கிழமை) இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் சுவிட்ஸர்லாந்து நாடாளுமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தீவிரவாத வன்முறைகளுக்கு எதிரான தேசிய திட்டத்தின் ஒரு அங்கமாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
சுவிட்ஸர்லாந்து இதுவரை எவ்வித தீவிரவாத தாக்குதல்களுக்கும் உட்படவில்லை. எனினும், அண்மைய ஆண்டுகளில் ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் கொடூரமான தாக்குதல்களுக்கு இலக்காகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.