Main Menu

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல்: பிரித்தானியாவில் வாக்குப்பதிவு ஆரம்பம்

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி பிரித்தானியா முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பிரித்தானியாவில் ஒன்பது தொகுதிகளுக்கு 73 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதேவேளை, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய இடங்களில் தலா ஒருவர் தெரிவுசெய்யப்படவுள்ளார்.

ஒவ்வொரு பிராந்தியத்திலும் அங்குள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் வௌ;வேறு எண்ணிக்கையினர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

வாக்களிப்பு நிலையங்கள் காலை 7 மணிக்கு திறக்கப்பட்டுள்ள நிலையில், இரவு 10 மணிவரை மக்கள் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மூன்று தினங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்திலும் வாக்களிப்பு நிறைவடையும்வரை எந்தவொரு பிராந்தியத்திற்குமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட மாட்டாது.

வாக்களிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 26ஆம் திகதி இரவு 10 மணியுடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...