ஜூலை 14 நிகழ்வுகள்! – தடையும் – அனுமதியும்
இவ்வருடத்தின் ஜூலை 14, தேசிய நாள் நிகழ்வின் போது வான வேடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்தவருடம் போல் இல்லாமல் இவ்வருடம் சோம்ப்ஸ்-எலிசேயின் இராணுவ அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இம்முறை ஈஃபிள் கோபுரத்தை மையமாக கொண்டு பட்டாசுகள், வானவேடிக்கை காட்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஈஃபிள் கோபுரத்தில் இடம்பெறும் இவ்வருடத்துக்கான வானவேடிக்கை Liberté (சுதந்திரம்) எனும் தொனிப்பொருளில் இடம்பெற உள்ளது. தொலைக்காட்சிகளில் நேரடியாகவும் ஒளிபரப்பாக உள்ளது. அதேவேளை, தீயணைப்பு படையினரால் நிகழ்த்தப்படும் bals des pompiers நிகழ்வுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.