சூரிச் விமான நிலைய சிறையில் இருந்து தப்பிய மூன்று கைதிகள்!
சுவிட்சர்லாந்தில் குடிவரவு மற்றும் ஒருங்கிணைப்பு சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்ட மூவர், விமான நிலைய சிறையில் இருந்து தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் குடிவரவு மற்றும் ஒருங்கிணைப்பு சட்டங்களை மீறுபவர்களை நாடுகடத்தும் பொருட்டு, சூரிச் விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சிறையில் இருந்து மூவர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. தப்பிய மூவரும் எந்த நாட்டினர் என்ற தகவல் வெளியாகவில்லை.
மட்டுமின்றி, அவர்கள் மூவரும் இதுவரை பொலிசாரிடம் சிக்கவும் இல்லை என தெரியவந்துள்ளது.
கைதிகள் மூவர் தப்பியதாக தகவல் வெளியானதை அடுத்து, சூரிச் மண்டல பொலிசார் உடனடியாக தேடுதல் வேட்டை இறங்கியுள்ளனர்.
மட்டுமின்றி துறை ரீதியான விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.