சுவிஸ்லாந்தில் 300 பேர் வரை ஒன்று கூடுவதற்கு அனுமதி!
பொது மற்றும் தனியார் நிகழ்வுகளில் 300 பேர் வரை ஒன்று கூடுவதற்கும், தன்னிச்சையாக 30 பேர் வரை கூடுவதற்கும் சுவிஸ்லாந்து அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருகின்றன.
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று வீதம் குறைந்துவரும் நிலையில் சுவிஸ்லாந்து அரசாங்கம் இந்த முடிவினை எடுத்துள்ளது.
அத்துடன், 1,000 பேர் வரை நிகழ்வுகளுக்கு ஒன்று கூடுவதற்கு அனுமதிக்கலாமா என்பது குறித்து ஜூன் 24ஆம் திகதி அரசாங்கம் முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 1,000 இற்க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் பெரிய நிகழ்வுகள் ஒகஸ்ட் மாதம் இறுதி வரை சாத்தியமில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதிக்குள் பிற ஷெங்கன் மண்டல உறுப்பு நாடுகளுடன் மக்கள் தடையற்ற இயக்கத்தை மீட்டெடுக்க விரும்புவதாக அரசாங்கம் கூறியுள்ளது
பகிரவும்...