சுவிஸில் கார் விபத்து ஒருவர் உயிரிழப்பு: 6 மாத குழந்தை படுகாயம்
சுவிட்சர்லாந்தின் கிராபண்டன் பகுதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 மாத குழந்தை ஒன்று காயமடைந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் 52 வயதுடையவர் என்றும் அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய இன்னொரு வாகனத்தில் 6 மாத குழந்தையுடன் வந்த இளம் வயது தம்பதி, காயங்களுடன் தப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.