சுற்றுலா வரும் பிரான்சுக்கு கொண்டு வரப்பட்ட ஒலிம்பிக் தீபம்
பிரான்சுக்கு கொண்டுவரப்பட்ட ஒலிம்பிக் தீபம் நாடு முழுவதும் உள்ள 400 நகரங்களுக்கு கொண்டுசெல்லப்பட உள்ளது. மொத்தமாக 10,000 பேர் இந்த தீபத்தினை சுமக்க உள்ளனர். இந்நிலையில், அதனை தடுக்கும் முயற்சிகளும் பதிவாகி வருகிறது.
பிரான்சுக்கு தீபம் கொண்டுவரப்பட்டதில் இருந்து இதுவரை 23 சம்பவங்கள் இதுபோல் முறியடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்துள்ளார். ’ஒலிம்பிக் விழாவினை சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட 23 நடவடிக்கைகள் வார தொடக்கத்தில் இருந்து முறியடிக்கப்பட்டுள்ளன!” என அவர் குறிப்பிட்டார்.
ஒலிம்பிக் தீபம் மே 8 ஆம் திகதி புதன்கிழமை பிரான்சின் மார்செய் நகருக்கு வந்தடைந்திருந்தது. அங்குள்ள ‘பழைய துறைமுகம்’ பகுதியில் பெரும் கொண்டாட்டங்களுடன் தீபம் வரவேற்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...