சிவசக்தி ஆனந்தனுக்கு வரவேற்பும், தரம் ஐந்து புலமைப்பரிசில் சித்தியெய்திய ஐம்பது மாணவர்களுக்கு கௌரவிப்பும்
பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமூகப்பணி பிரிவு ஊடாக லண்டனைச் சேர்ந்த டொக்டர் ரவி, மற்றும் ஜேர்மனியை சேர்ந்த சிறினிசங்கர் சக்திதேவி குடும்பத்தினர் தமது பெறாமகன் சிற்சபேசன் ரவிவர்மாவின் ஆறாம் மாத நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய நிதிப்பங்களிப்போடு ஐம்பது மாணவர்களுக்கு கௌரவிப்பு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
சமாதான நீதவான் அமிர்தலிங்கம் தலைமையில், வவுனியா, ஓமந்தை வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் 24.10.2015 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு வரவேற்பும், ஓமந்தை பிரதேசத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய ஐம்பது மாணவர்களுக்கு கௌரவிப்பும் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நடராஜ், இ.இந்திராசா, ம.தியாகராசா, ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள், கிராம பொது அமைப்புகள், கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
ஓமந்தை பிரதேசத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய ஐம்பது மாணவர்களுக்கு விழாக்குழுவினரால் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு,
பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமூகப்பணி பிரிவு ஊடாக லண்டனைச் சேர்ந்த டொக்டர் ரவி, மற்றும் ஜேர்மனியை சேர்ந்த சிறினிசங்கர் சக்திதேவி குடும்பத்தினர் தமது பெறாமகன் சிற்சபேசன் ரவிவர்மாவின் ஆறாம் மாத நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய நிதிப்பங்களிப்போடு ஐம்பது மாணவர்களுக்கு புத்தக பைகளும் வழங்கப்பட்டன.