காபி சுவையுடன் ஊக்க பானமாக புதிய கொக்கொ கோலா – இந்த ஆண்டில் அறிமுகம்
புதிய காபி சுவையுடன் கூடிய ஊக்கபானத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொக்கொ கோலா நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது.
18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைவலிக்காக நிவாரணம் தேடி மருந்துக் கடைகளுக்கு வந்தவர்களுக்கு கடைக்காரர்கள் ஒரு ரகசிய பொருளை தண்ணீரில் கரைத்து தந்தனர்.
இதை சாப்பிட்ட பலருக்கு உடனடியாக தலைவலி பறந்தே போனது. அந்த ‘ரகசிய மருந்து’ தான் நாளடைவில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு ‘ கொக்கொ கோலா’ என்ற வணிகப் பெயருடன் உலக நாடுகளில் உள்ள விற்பனை கூடங்களில் பிரபலமடைந்தது.
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கொக்கொ கோலாவின் தலைமை அலுவலகம் உள்ளது. கொக்கொ கோலா நிறுவனம் தற்போது காபி சுவைக் கொண்ட கோக்கினை விற்பனை செய்யவுள்ளது. இந்த புதிய காபி சுவைக் கொண்ட கோலா இந்த ஆண்டின் இறுதிக்குள் விற்பனை செய்யப்பட உள்ளது.
இது தனிச்சுவைக் கொண்ட ஊக்க பானம் ஆகும். இந்த கோக்கில் கேபைன் எனப்படும் வேதியல் கரைசல் சேர்க்கப்படுகிறது. இதனை நமது உடல் முழுமையாக உள்வாங்கிக் கொள்கிறது. கண் விழிகள் விரிவடைகின்றன.
இதை ஈடுசெய்ய அதிகமான சர்க்கரையை நமது கல்லீரல் இரத்தத்துக்கு அனுப்புகிறது. இந்த நிலையில் சோர்வை உணர்ந்துக் கொள்ளக் கூடிய மூளையின் உணர்வுப் பகுதி தற்காலிகமாக தடைக்குள்ளாகின்றது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் கோக் 25 நாடுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த காபி சுவைக் கொண்ட கோக், ஏற்கனவே 2 முறை விற்பனைக்கு கொண்டவரப்பட்டது. தற்போது ஒரு பாட்டில் சோடாவை விட கூடுதலான கேபைன். ஆனால், ஒரு கோப்பை காப்பியை விட குறைவு எனும் தாரக மந்திரத்துடன் இந்த புதிய கோக், ஊக்க பானமாக சந்தைக்கு வர உள்ளது.