கலைக்கப்பட்ட இஸ்ரேலிய நாடாளுமன்றம் – செப்டம்பரில் தேர்தல்
இஸ்ரேலிய நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஆதரவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்துள்ளனர்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவால் கூட்டணி அரசாங்கம் ஒன்றினை அமைக்க முடியாமை காரணமாகவே, நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஆதரவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
இதன்காரணமாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி இஸ்ரேலிய நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
120 இடங்களை கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் நெதன்யாஹுவின் லிகுட் கட்சி 35 இடங்களில் மாத்திரமே வெற்றி பெற்றிருந்தது.
இதன்காரணமாக வலதுசாரி கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சியை அமைப்பதற்கு பெஞ்சமின் நெதன்யாஹு முயற்சித்த போதும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.