கர்ப்பிணி தாய்மாருக்கான போசாக்கு உலர் உணவு பொருள் வழங்கி வைப்பு
TRT வானொலியின் சமூகப்பணி ஊடாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் கற்குளம் பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட வறுமை கோட்டுக்குட்பட்ட கர்ப்பினி தாய்மார்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் நிகழ்வு 17.11.2019 அன்று கற்குளம் பகுதியில் உள்ள பொது நோக்கு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் செல்வ உதயன் மற்றும் ருசாந்தன் ஆகியோரால்; போசாக்கு உலர் உணவு பொருள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கான நிதி அனுசரணையை அமெரிக்காவை சேர்ந்த ரவிசங்கர் மற்றும் ஜேர்மனியை சேர்ந்த பசுபதி ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.