Main Menu

இளம் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

சுவிஸில் இளம் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய சுவிஸில் 20 வயதுக்கு உட்பட்ட இளம் தாய்மார்களின் எண்ணிக்கை 0.8 சதவீதம் என தெரிவிக்கப்படுகின்றது.

இது ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்பதுடன், ஐரோப்பியாவிலேயே இளம் தாய்மார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என கருதப்படும் டென்மார்க்கில் 1 சதவீத இளம் தாய்மார்களே உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், ஐரோப்பிய நாடுகளில் இளம் தாய்மார்களின் எண்ணிக்கை சராசரியாக 4 சதவீதம் எனவும் கூறப்படுகிறது.

இதேவேளை, பல்கேரியா மற்றும் ருமேனிய நாடுகளில் இளம் தாய்மார்களின் எண்ணிக்கை 12 சதவீதம் எனவும் தெரியவந்துள்ளது.

பகிரவும்...
0Shares