அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு தொழில்நுட்ப சாதனங்களை ஏற்றுமதி செய்ய சுவிட்சர்லாந்து தடை!
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு சில தொழில்நுட்ப சாதனங்களை ஏற்றுமதி செய்ய சுவிட்சர்லாந்து தடை விதித்துள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட சில தொழில்நுட்ப சாதனங்களை கொண்டு அணு ஆயுதம் தயாரிக்க முடியும் என்ற அச்சம் இருப்பதால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் தெரிவித்துள்ளது.
நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்துவது மிகவும் அசாதாரணமானது என்று கூறப்படுகிறது. மத்திய அதிகாரிகள் கடந்த ஆண்டு இருமுறை, லேசர் அளவிடும் கருவிகள் மற்றும் இயந்திரம் சுழல் அச்சு உபகரணங்களின் விற்பனையை நிறுத்த முற்பட்டனர் என்பது நினைவுக்கூரதக்கது.
இச்சட்டத்தின் மூலம் பேரழிவு ஆயுதங்களை உருவாக்க பயன்பாடும் தொழில்நுட்பத்தை விற்க தடை செய்யப்பட்டுள்ளது.