Main Menu

TRT தமிழ் ஒலியின் அனுசரணையில் மகசீன் சிறையில் பொங்கல் திருநாள்

பிரான்ஸ் தமிழ் ஒலி வானொலியின் 21 வது ஆண்டு நிறைவையொட்டி மகசீன் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தைப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான வழி வகைகளை TRT வானொலி அமைத்துக் கொடுத்துள்ளது. இலங்கை அரசின் அனுமதியுடன் இன்றைய தினம்   பொங்கல் விழாவுக்கான  பொங்கல் பொருட்களையும் மதிய போசன விருந்தையும் கைதிகளுக்கு வழங்குவதில் தமிழ் ஒலி வானொலி பெருமிதமும் திருப்தியும் அடைகிறது . தமிழ் ஒலி வானொலியின் சமூகப்பணியூடாக நேயர்களின் ( அன்ரி அம்மா பிள்ளைகள்,பாரிஸ் பாலா அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினர்) இணை அனுசரணையுடன், 13 அரசியல் கைதிகள் உட்பட 150 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மகசீன் சிறைச்சாலையில் புலம்பெயர் ஊடகம் என்ற முறையில் ஓர் வானொலியின் அனுசரணையில் கைதிகள் தைப்பொங்கல் தின விழாவை கொண்டாடுவது இதுவே முதல் முறை. இப் பெருமையை TRT வானொலி பெற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறது.

எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாமல் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைக்கைதிகள், பிறந்திருக்கும் புத்தாண்டில், தைமகளின் ஆசியுடன் விடுதலையை அடைந்து சுபீட்சமான வாழ்வை அவர்களும் வாழ வேண்டும் என அனைவரும் பிரார்த்திப்போமாக.

பகிரவும்...