Main Menu

COVID 19 க்கான தகவல்களுக்காக தேசிய இணையதளம்

COVID 19 க்கான தகவல்களுக்காக www.covid19.gov.lk என்ற பெயரில் தேசிய இணையதளம் ஒன்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனமான ICTA ஆரம்பித்துள்ளது.

அரசாங்கத்தின் நிலையான நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து COVID 19 தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்காக தேசிய இணையதளமொன்றை www.covid19.gov.lk.. என்ற பெயரில் முன்னெடுத்துள்ளது.

COVID 19 காரணமாக நாட்டில் முன்நிகழ்ந்திராத நிலமையை கவனத்தில் கொண்டு இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்ற நம்பகமான ஆதாரங்களின்

அடிப்படையூடாக பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவது இதன் நோக்கமாகும்.

ஜனாதிபதி செயலகம் சுகாதார அலுவலகம், COVID 19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம், அரசாங்க தகவல் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை இராணுவம் முதலானவை இந்த பணிகளில் ஈடுபட்டுள்ள முக்கிய நிறுவனங்களாகும்.

இந்த இணையதளத்தில் சமர்ப்பிக்கப்படும் தகவல் அல்லது தரவுகள் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொறுப்புமிக்க தரப்பினரிடம் பெற்றுக் கொள்ளப்படுபவைகளாகும்.

COVID 19 தொற்றுபரவுவது தொடர்பான சகல தகவல்களும் செயற்பாடுகளையும் கண்டறிவதற்கு இது ஒரு தகவல் கேந்திரநிலையமாவதுடன் , உள்ளுர் மற்றும் சர்வதேச ரீதியில் சமீபத்திய புதுப்பிப்புகளுடன் துல்லியமான தகவல் தொர்புகளை பொது மக்கள் மேற்கொள்ள இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

மேலும் இந்த இணையதளம் சுகாதார விடயங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல பொருளாதாரம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, சுற்றுலா, போக்குவரத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு , அத்தியாவசிய பொருட்களை விநியோகித்தல், சமூக சேமநலம், சட்டம் மற்றும் சமாதானம், பாதுகாப்பு மற்றும் அயல்நாடு போன்ற பல தகவல்களை அறிந்துகொள்ளக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. . வரையறுக்கப்பட்ட eMarketingEye (pvt) Ltd நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...