Main Menu

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவரும் ஜேர்மனியில் தொற்று பரவலை தடுக்க கட்டாய சட்டம்!

கொரோனா வைரஸ் தொற்றை சிறந்த முறையில் கட்டுப்படுத்தும் மற்றும் மீண்டுவரும் நாடுகளில் முக்கிய ஐரோப்பிய நாடாக விளங்கும் ஜேர்மனி, முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) முதல் வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் அமுலில் உள்ள முடக்க நிலையில் கடந்த வாரம் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும், வைரஸ் தொற்றினை தடுக்கும் முக்கிய கட்டுப்பாடுகள் நடைமுறையிலேயே உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள நாடுகளில ஆறாவது இடத்தில் உள்ள ஜேர்மனியில், எதிர்வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காதவாறு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பகிரவும்...