இலங்கை
மாங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு ஆளுநர் விஜயம்
மாங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு நேற்று(24) நண்பகல் திடீர் விஜயம் மேற்கொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வைத்தியசாலையின் நிலைமைகள் குறித்து நேரில் ஆராய்ந்தார். இந்த வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்கள் வைத்தியசாலையினை மிகவும் தூய்மையாக வைத்திருப்பதனை பாராட்டிய ஆளுநர் தொடர்ச்சியாக இதனைமேலும் படிக்க...
லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை தொடர்பில் சிறைவாசம் அனுபவித்தவர் உயிரிழப்பு
முன்னாள் வௌிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் சிறைவைக்கப்பட்டிருந்த விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
நானும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயார் – ராஜித
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,“பிரபலமான பௌத்த பிக்கு ஒருவர், என்னை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டார். கட்சி முடிவு செய்துமேலும் படிக்க...
விக்கினேஸ்வரன் தனது அரசியல் சுய லாபங்களுக்காக கீழ் மட்டத்தில் வீழ்ந்துள்ளார் – சுமந்திரன்
அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல. விக்கினேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவி கொடுக்காது. அதேபோல் விக்கினேஸ்வரன் தனது அரசியல் சுயலாபங்களுக்காக எந்தளவு கீழ் மட்டத்தில் வீழ்ந்துள்ளார் என்பது நன்றாக வெளிப்பட்டுவிட்டது எனமேலும் படிக்க...
அடுத்த ஜனாதிபதி உயர் தரமாவது கல்வி கற்றிருக்க வேண்டும்
அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு தலைவர் நாட்டிற்கு தேவை என திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார். நேற்று (23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியலின் ஊடாக நாட்டின் எல்லாமேலும் படிக்க...
நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால் அனைத்தும் செயலிழந்து விடும்
தேசிய பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்கும் ஒழுக்கம் ஒன்று நாட்டிற்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (23) கண்டி, கெட்டம்போ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால்மேலும் படிக்க...
முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு வடக்கு ஆளுநர் விஜயம்
முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு இன்று (24) நண்பகல் விஜயம் மேற்கொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அங்கு மரத்தடி நிழலில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். தனது சிறுவயது பாடசாலைக் காலத்தில் இவ்வாறுமேலும் படிக்க...
நியமனத்தில் தவறவிடப்பட்ட தொண்டராசியர்கள் ; யாழில் உண்ணாவிரதப் பேராட்டம்
எதிர்வரும் 27 ஆம் திகதி 372 தொண்டராசியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ள நிலையில், வடமாகணத்தைச் சேர்ந்த தவறவிடப்பட்ட 172 தொண்டராசிரியர்கள் ஒரு மாத காலத்துக்குள் தமக்கு நியமனம் வழங்குமாறு கோரி வடமகாண கல்வி அமைச்சின் முன்பாக இன்று முதல் தொடக்கம் தொடர் உணவுமேலும் படிக்க...
6ஆவது நாளாகவும் தொடரும் மதத்தலைவர்களின் போராட்டம் – ஞானசார தேரரும் நேரில் ஆதரவு
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) 6ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள்,மேலும் படிக்க...
அவசரகாலச் சட்டம் மீண்டும் ஒரு மாதகாலம் நீடிப்பு
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் பின்னா் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டு விசேட வா்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் திகதி முதல்மேலும் படிக்க...
முஸ்லிம் என்ற காரணத்திற்காக வைத்தியர் ஷாபியை பழிவாங்க வேண்டாம் ;ரிஷாத்
குருநாகல் வைத்தியர் தவறு செய்திருந்தால் விசாரித்து உரிய முறையில் தண்டிப்பதை விடுத்து விட்டு முஸ்லிம் வைத்தியர் என்ற காரணத்திற்காக முழு முஸ்லிம் வைத்திய சமுதாயத்தையும் கேவலப்படுத்த வேண்டாமென பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். குருநாகல், வைத்தியர் ஷாபி தொடர்பாக இன்றுமேலும் படிக்க...
சலுகைகளுக்கு அடிபணியாத நேர்மையான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உருவாக வேண்டும் – விக்னேஸ்வரன்
சலுகைகளுக்கு அடிபணியாத நேர்மையான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உருவாக வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மின்னஞ்சல் மூலம் ஊடகங்களுக்கு வழங்கும் வாராந்த கேள்வி பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம்மேலும் படிக்க...
ஐ.நா சமாதான படையணிகளின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு
ஐ.நா அமைதிகாக்கும் பணிக்காக பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகளை விடுவிக்கின்றபோது மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் தடை நீக்க நடவடிக்கைகள் தாமதமடைவதன் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன்மேலும் படிக்க...
அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் ஞானசாரர்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் மாகாண சபை அமைச்சில் நேற்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் பிரவேசித்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. நேற்றுக்காலை இந்தக்கூட்டம் நடைபெற்றது. மேலும் படிக்க...
5 ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி இன்று ஐந்தாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த நாட்களாக பல அரசியல்வாதிகளும் வருகை தந்தது இந்தபோராட்டத்திற்காக தங்களது ஆதரவினை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று வருகை தந்த அத்துரேலியமேலும் படிக்க...
அடிப்படைவாதிகள் தமிழர்களின் உரிமையை வழங்க மறுக்கின்றனர் – அம்பிட்டிய சுமணரத்ன தேரர்
அடிப்படைவாதிகள் தமிழர்களின் உரிமையை வழங்க மறுக்கின்றனர் என மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் படிக்க...
எமது விடுதலை தொடர்பில் யாரும் அக்கறை காட்டவில்லை ; தமிழ் அரசியல் கைதிகள் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவிப்பு
மகசின் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வை இடுவதற்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் இன்று காலை பத்து மணியளவில் நேரில் சென்றிருந்தார். சுமார் ஒருமணி நேரத்திற்கும் அதிகமாகமேலும் படிக்க...
சதிகாரர்களால் நாட்டின் காணிகளை அழிப்பதற்கு இடமளிக்க முடியாது ; ஜனாதிபதி
சதிகாரர்கள் நாட்டின் காணிகளை சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாதென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். காணிகளின் உரிமை பொதுமக்களுக்கானது என்றும் காணி கொள்கையொன்றை விரைவில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். இன்று (20) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றமேலும் படிக்க...
“தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை”
தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை. இவ்வாறான நிலையில் பௌத்த தேரர் உண்ணாவிரதமிருந்து அனாவசியமான பிரச்சினையை ஏற்படுத்துகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று பெயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல்(நீக்கல்)மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 399
- 400
- 401
- 402
- 403
- 404
- 405
- …
- 433
- மேலும் படிக்க
