Main Menu

விக்­கி­னேஸ்­வரன் தனது அர­சியல் சுய­ லா­பங்­க­ளுக்­காக கீழ் ­மட்­டத்தில் வீழ்ந்­துள்ளார் – சுமந்திரன்

அர­சாங்­கத்தின் வாக்­கு­று­தி­களை எமது மக்கள் முன்­னி­லையில் சென்று கூறு­வது மாமா வேலை அல்ல. விக்­கி­னேஸ்­வ­ரனின் கீழ்த்­த­ர­மான வார்த்தைப் பிர­யோ­கங்­க­ளுக்கு கூட்­ட­மைப்பு செவி­ கொடுக்­காது. அதேபோல் விக்­கி­னேஸ்­வரன் தனது அர­சியல் சுய­லா­பங்­க­ளுக்­காக எந்­த­ளவு கீழ் ­மட்­டத்தில் வீழ்ந்­துள்ளார் என்­பது நன்­றாக வெளிப்­பட்­டு­விட்­டது என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஊட­கப்­ பேச்­சா­ளரும் எம்.பி.யு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

கல்­முனை வடக்கு பிர­தே­ச­ சபை விவ­கா­ரத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துக்கு மாமா வேலை செய்­கின்­றது என வடக்கின் முன்னாள் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் பகி­ரங்­க­மாகத் தெரி­வித்­துள்ள நிலையில் அதற்குப் பதில் கூறும் வகை­யி­லேயே  சுமந்­திரன் எம்.பி. இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில், 

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களைப் பெற்­றுக்­கொ­டுக்க தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு எப்­போ­துமே முன்­னின்று செயற்­பட்டு வரு­கின்­றது. இன்­று­ வரை வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பெற்றுக் கொண்­டுள்ள தமது உரி­மை­க­ளுக்கு எமது தலை­யீ­டுகள் பிர­தான காரணம் என்­பதை மறந்­து­விடக் கூடாது. காணி விடு­விப்­புகள் உள்­ளிட்ட முக்­கி­ய­மான விவ­கா­ரங்­களில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் செயற்­பா­டு­களை மறந்­து­வி­டக்­ கூ­டாது. இப்­போது கல்­முனை வடக்கு செய­ல­கப்­ பி­ரிவு விவ­கா­ரத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் தீர்வைப்  பெற்­றுக்­கொ­டுப்­பதில் அதிக அக்­க­றை­யுடன்  செயற்­பட்டு வரு­கின்­றனர். இன்று எமது தமிழ் மக்கள் முன்­னெ­டுக்கும் போராட்­டங்­களில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பிர­தே­ச­ சபை உறுப்­பி­னர்கள் இரு­வரும் கூட உள்­ளனர். இவை கட்சி அடை­யா­ளங்கள் பார்த்து முன்­னெ­டுக்­கப்­படும் விட­ய­மல்ல. 

அவ்­வாறு இருக்­கையில் அர­சாங்­கத்தின் அறிக்­கையை கல்­மு­னையில் சென்று வாசித்­தமை மாமா வேலை என முன்னாள் முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் கூறி­யது மிகவும் கீழ்த்­த­ர­மான வார்த்­தைப் ­பி­ர­யோ­க­மாகும். எமது மக்­களின் உரி­மை­க­ளையும் எமக்­கான அடை­யா­ளங்­க­ளையும் நாம் பெற்­றுக்­கொள்ள அரச தரப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ள நிலையில் அர­சாங்கம் எமக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை எமது மக்கள் முன்­னி­லையில் நாம்தான் எடுத்­துக்­ கூற வேண்டும். அர­சாங்கம் நேர­டி­யாக வந்து அந்தப் பகு­தியில் அறிக்­கையைத் தராது. இந்தப் பகுத்­த­றிவு கூட இல்­லாத நபர்கள் தகு­தி­யற்ற வார்த்­தை­களைப் பயன்­ப­டுத்தி  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை விமர்­சிக்­கின்­றனர்.  

முன்னாள் முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் பிர­யோ­கிக்கும் வார்த்தைப் பிர­யோ­கங்கள் மூல­மாக அவர் எந்­த­ளவு கீழ்த்­த­ர­மான அர­சி­யலைச் செய்­கின்றார் என்­பதும் அவர் எந்த மட்­டத்தில் இன்று விழுந்­துள்ளார் என்றும் நன்­றாகத் தெரி­கின்­றது. ஆனால் இவரின் இந்த நிலை­மைக்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பும் விழப்­போ­வ­தில்லை. நாம் எமது மக்­க­ளிடம் நேர­டி­யாக பிரச்­சி­னை­களை எடுத்­துக்­ கூறி தீர்­வு­களைப் பெற்­றுக்­கொ­டுப்போம். விக்கினேஸ்வரன் போன்று கீழ்மட்ட அரசியல் செய்து மக்களை ஏமாற்ற மாட்டோம் என அவர் குறிப்பிட்டார்.

பகிரவும்...