Main Menu

5 ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி இன்று ஐந்தாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த நாட்களாக பல அரசியல்வாதிகளும் வருகை தந்தது இந்தபோராட்டத்திற்காக  தங்களது ஆதரவினை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று வருகை தந்த அத்துரேலிய ரத்தின தேரர் இப்பிரச்சினைக்கு நல்லதொரு  தீர்வு ஒன்று இன்று எட்டப்படும் என உறுதியளித்திருந்தார்.

இது ஒரு புறமிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கல்முனை வடக்கு தமிழ் பிரிவு பிரதிநிதிகள் மற்றும் பொது நிருவாக உள்நாட்டு அமைச்சர் பிரதமர் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. இதன் போது தரமுயர்துவதற்கு பிரதமர் அறிவுறித்தியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கலந்துரையாடலில் எட்டப்பட்ட சில விடயங்களை எழுத்து மூலம் கொண்டுவந்து பிரதேச செயலகம் தரமுயர்துவதற்கு சட்டப்படியான ஆவணம் என அம்பாறை மாவட்ட அரச அதிபர் ஊடாக காண்பித்து உண்ணாவிரதத்தினை கைவிடுமாறு கோரி  போராட்டத்தினை இடை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஒருபோது தாங்கள் செவிசாய்க்க போவதில்லை எனவும் வர்த்தமானி பிரகடனத்தின் பின்னரே எமது போராட்டம் நிறைவுறுத்துவது பற்றி சிந்திப்போம் என போராட்டக்கார்கள் அறிதியும் உறுதியுமாக தெரிவித்து விடாப்பிடியிலுள்ளனர். இதுவே அனைத்து மக்களினது ஏகோபித்த தீர்மானமாகவும் இருந்து வருகின்றது எனவே இன்று போராட்டத்தில் நடக்கபோவது என்ன என்பதனை பொருத்திருந்துதான் பார்கக்க வேண்டும். 

பகிரவும்...