இலங்கை
சஜித்தை தலைவராக்குங்கள் – ஐ.தே.க உறுப்பினர்கள் கோரிக்கை
பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுதியான நிலைமையை தக்கவைத்துக் கொள்வதற்காக கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரமாதசவே பொறுக்பேற்க்க வேண்டும் என்று ஐ.தே.க.வின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார , தலத்தா அத்துகோரள , சந்ராணி பண்டார ஆகியோர்மேலும் படிக்க...
பாதுகாப்பு செயலாளரின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் போராட்டம்
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு இன்று (வியாழக்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கபட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டோரின்மேலும் படிக்க...
ஊடக சுதந்திரத்துக்கு எவ்வித தாக்கங்களும் ஏற்படாது – ஜனாதிபதி
தமது ஆட்சியில் ஊடக சுதந்திரத்துக்கு எவ்வித தாக்கங்களும் ஏற்படபோவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும் ஊடக பிரதானிகளுக்கும் இடையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டிற்கும் நாட்டின் நற்பெயருக்கும் பயனளிக்கும் ஒரு ஊடக சேவையில்மேலும் படிக்க...
இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக் கூறலும் உறுதிப் படுத்தப்படும் – பொரிஸ் ஜோன்சன் நம்பிக்கை
இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்படும் என்று தான் நம்புவதாக பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்தார். இன்று (வியாழக்கிழமை) விசேட செய்தியொன்றை வெளியிட்டுள்ள பிரதமர், தமிழ் சமூகம் இந்த நாட்டிற்குச் செய்துவரும் அனைத்து விடயங்களிற்காகவும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். அவர், மேலும்மேலும் படிக்க...
உலகில் 15 வீதமான குழந்தைகள் நீரிழிவு நோய்க்கு உள்ளாகின்றனர்-புவிராஜ்
உலகில் 15 வீதமான குழந்தைகள் நீரிழிவு நோய்க்கு உள்ளாவதாக மட்டக்களப்பு வலய முன்பள்ளிக்கான உதவி கல்வி பணிப்பாளர் எஸ்.புவிராஜ் தெரிவித்தார். மேலும் ஐந்தாம் தரப்புலமைப்பரில் பரீட்சையானது ஒரு தோல்வியடைந்த திட்டம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு- தாண்டவன்வெளி பியூட்ச மைன்ட் கின்டஹார்டன்மேலும் படிக்க...
மானிப்பாயிலுள்ள வீடொன்றில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்
மானிப்பாய்- சுதுமலை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல், பொலிஸாரைக் கண்டதும் மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கைவிட்டுத் தப்பி ஓடியுள்ளது. இந்தச் சம்பவம் மானிப்பாய்- சுதுமலை வடக்கில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் ஒரு மணியளவில்மேலும் படிக்க...
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் பெண்ணிற்கு வெளிநாடு செல்ல தொடர்ந்தும் தடை!
சுவிஸ் தூதரகத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணிற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் வெளிநாடு செல்வதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளுக்கு அவர் ஒத்துழைப்பு வழங்க உத்தரவிடக் கோரி சி.சி.டி. தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (வியாழக்கிழமை) கொழும்புமேலும் படிக்க...
சஜித் தலைவரானால் பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வுக்கு பாரிய வெற்றி கிட்டும் – திஸ்ஸ
சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிப்பதன் ஊடாக, பொதுத் தேர்தலில் இந்தக் கட்சி பாரிய வெற்றியடையக் கூடிய சந்தரப்பங்கள் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.மேலும் படிக்க...
யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியா உதவி
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு உதவி செய்வதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய 300 மில்லியன் ரூபாயை உதவித் தொகையாக இந்தியா வழங்கவுள்ளது. கைத்தொழில் ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறைமேலும் படிக்க...
மனித உயிர்களை கொலை செய்ய யாருக்கும் இடமளிக்க முடியாது – கொழும்பு பேராயர்
மனித உயிர்களை கொலை செய்யவோ அடக்கியாளவோ எந்தவொரு தரப்பினருக்கும் இடமளிக்கக்கூடாது என கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இராணுவத்தினர் என்றமேலும் படிக்க...
“சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும் ”
சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும் எனும் தலைப்பில் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாதகல்லில் இருந்து கொழும்பு ஜனாதிபதி அலுவலகம் வரை நடைப்பயணம் ஒன்றை வி.சகாதேவன் ஆரம்பித்துள்ளார். இன்று காலை 8 மணியளவில் மாதாகல் சங்கமித்த விரையில் இருந்து தனது தாயின் ஆசீர்வாதத்தோடு நடைமேலும் படிக்க...
தவறான ஆலோசனைகள் வழங்குபவர்கள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் – முருந்தெடுவே ஆனந்த தேரர்
அரசியல் ரீதியில் தவறான ஆலோசனைகள் வழங்குபவர்கள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கவனம் செலுத்த வேண்டும். 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு ஒரு தரப்பினரது தவறான செயற்பாடுகளே பிரதான காரணியாக காணப்பட்டது. மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட அரசாங்கத்தில் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டால் கடுமையானமேலும் படிக்க...
சமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு – மனித உரிமைகள் ஆணைக்குழு
உலகலாவிய ரீதியில் அண்மைக்காலமாக சமுதாயப்பிளவுகள் அதிகரித்து பிரிவினை உருவாகிவரும் போக்கு காணப்படுகின்றது. அத்தகைய சவாலுக்கு இலங்கையும் முகங்கொடுத்துள்ளது. எனவே இந்த சவாலை எதிர்கொண்டு சமூகங்களின் மத்தியில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உண்டு என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்மேலும் படிக்க...
பிரியங்க பெர்னாண்டோவுக்கு இராணுவத்தில் புதிய பதவி
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இராணுவத்தின் காணி, சொத்து மற்றும் விடுதி ஆகியவற்றுக்கான புதிய பணிப்பாளராக கடமைகளை ஏற்றுக்கொண்டார் இராணுவத் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் தனது கடமைகளைப் உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ, முன்னதாக ரணவிரு சம்பத் மத்தியமேலும் படிக்க...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் கூட்டமைப்பாகவே செயற்படும் சி.வி.கே.சிவஞானம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பாகவே செயற்படும் தேர்தல்களிலும் தற்போது எவ்வாறு செயற்படுகின்றதோ அவ்வாறே தொடர்ந்தும் செயற்படும் என இலங்கை தமிழ்ரசுக்கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரும் வடக்கு மாகாண சபையின் அவை தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்து கட்டமேலும் படிக்க...
இலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய யுத்தக் குற்றச் சாட்டுகளை வெளியிட்டது சர்வதேச அமைப்பு
இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவிற்கு எதிராக புதிய யுத்தக் குற்றச்சாட்டுகளைசுமத்தியுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு இது குறித்த பல விபரங்கள் அடங்கிய ஆவணமொன்றையும் வெளியிட்டுள்ளது. இலங்கையின் இராணுவ தளபதி சவேந்திரமேலும் படிக்க...
சுவிஸ் ஊழியர் கடத்தப்பட்ட விவகாரம் – இதுவரை நடந்தவை என்ன?
தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு இலங்கையில் உள்ள பெண் தூதரக ஊழியர் அடையாளம் தெரியாத நபர்களால் நீண்ட காலமாக அச்சுறுத்தப்பட்டார் என நவம்பர் மாதம் 27 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் மத்திய வெளிவிவகார அமைச்சு கூறியிருந்தது. அத்தோடு இந்த சம்பவம் தமதுமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் போராட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். யாழ்.பிராந்திய அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுத்திருந்தனர். வட.கிழக்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள்மேலும் படிக்க...
முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்
முல்லைத்தீவு – மல்லாவியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 25 வயதான இளைஞர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரைமேலும் படிக்க...
ஆசிரியர் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடி : அவதானமாக இருக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்
ஆசிரியர் தொழில் பெற்றுதருவதாக குறிப்பிட்டு நிதி மோசடியில் ஈடுப்படுவதாக தகவல்கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கும் கல்வி அமைச்சு இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் உடனடியாக தமக்கு தெரியப்படுத்துமாறும் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 359
- 360
- 361
- 362
- 363
- 364
- 365
- …
- 434
- மேலும் படிக்க
