Main Menu

உலகில் 15 வீதமான குழந்தைகள் நீரிழிவு நோய்க்கு உள்ளாகின்றனர்-புவிராஜ்

உலகில் 15 வீதமான குழந்தைகள் நீரிழிவு நோய்க்கு உள்ளாவதாக மட்டக்களப்பு வலய முன்பள்ளிக்கான உதவி கல்வி பணிப்பாளர் எஸ்.புவிராஜ் தெரிவித்தார்.

மேலும் ஐந்தாம் தரப்புலமைப்பரில் பரீட்சையானது ஒரு தோல்வியடைந்த திட்டம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு- தாண்டவன்வெளி பியூட்ச மைன்ட் கின்டஹார்டன் முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் ஒளிவிழாவும் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணர் டாக்டர் கே.கடம்பநாதன், மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளிக்கான உதவி கல்வி பணிப்பாளர் புவிராஜ், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ரி.ஈஸ்பரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.

அத்துடன் முன்பள்ளி கல்வியை பூர்த்திசெய்து எதிர்வரும் ஆண்டு பாடசாலைக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கான சான்றிதல் வழங்கும் நிகழ்வும் இதன்போது நடைபெற்றது.

கிறிஸ்து பிறப்பினை சிறப்பிக்கும் வகையில் கரோல் கீத நிகழ்வுகள், பாலன் பிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நத்தார் தாத்தாவும் வருகைதந்து ஆடிப்பாடி சிறுவர்களை மகிழ்வித்தார்.

பகிரவும்...