Main Menu

மனித உயிர்களை கொலை செய்ய யாருக்கும் இடமளிக்க முடியாது – கொழும்பு பேராயர்

மனித உயிர்களை கொலை செய்யவோ அடக்கியாளவோ எந்தவொரு தரப்பினருக்கும் இடமளிக்கக்கூடாது என கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இராணுவத்தினர் என்ற வகையில், மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டியது பிரதானக் கடப்பாடாக இருக்கிறது.

சில சமயங்களில் தீயவர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க உயிர்த்தியாகங்களையும் செய்ய வேண்டிய நிலைமை இராணுவத்தினருக்கு ஏற்படும்.

இதற்காக நாம் அனைத்து பாதுகாப்புத் தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் வாழும் உரிமையை உறுதிப்படுத்த இராணுவம் உள்ளிட்ட முப்படையினருக்கு நாம் நன்றிகளைத் தெரிவித்தே ஆகவேண்டும்.

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு நாம் இந்த வருட ஆரம்பத்தில் முகம் கொடுத்தோம். இதனால் நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டன. பொறுப்பில் உள்ள நபர்களின் அலட்சியப் போக்கினாலேயே இந்த விளைவு ஏற்பட்டது.

நாம் மக்களின் உயிரைப் பாதுகாக்கவே இங்கு வந்துள்ளோம். அந்தவகையில், எந்தவொரு உயிரையும் பறிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்” என குறிப்பிட்டார்.

பகிரவும்...