Main Menu

யாழ் – புத்தூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அச்சுவேலி காவல்துறையினர் சூரியன் செய்திச் சேவைக்குத் உறுதிப்படுத்தினார்.

காயமடைந்தவர்களின் நிலை சற்று மோசமாக உள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

புத்தூரைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே விபத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

பாரவூர்தி ஒன்றுடன் முச்சக்கர வண்டி மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.