இலங்கை
வினாத்தாள் கசிந்த விவகாரம் – ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்

வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்தார். 6 மற்றும் 7ஆம் தரங்களுக்கான பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம்மேலும் படிக்க...
கடவுச்சீட்டுகள் அலுவலகத்தை கிழக்கிலும் ஆரம்பிக்க வேண்டும் ஹிஸ்புல்லா எம்.பி கோரிக்கை

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை கிழக்கு மாகாணத்திலும் உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா சபையில் தெரிவித்தார். கொழும்பு மற்றும் வடக்கு, தெற்கு, மத்திய மாகாணங்களில் கடவுச்சீட்டு அலுவலகம் காணப்படுவதாகவும் ஆனால்,மேலும் படிக்க...
கண்டியில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ; மூவர் கைது

கண்டி பிரதேசத்தில் இயங்கி வந்த போலி கச்சேரி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
ரோஹிங்கியா ஏதிலிகள் விவகாரம் தொடர்பில் ரிஷாட் எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா ஏதிலிகள் தொடர்பில் சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அண்மையில் படகு மூலம் இலங்கையில் தஞ்சமடைந்த 102 ரோஹிங்கியா ஏதிலிகள் திருகோணமலைக்கு அழைத்துமேலும் படிக்க...
ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம்

கொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று 8 ஆம் திகதி புதன்கிழமை காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம் பெற்றது. கொலை செயய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவு தூபியில் மட்டக்களப்பு மாவட்டமேலும் படிக்க...
புலமைப்பரிசில் பரீட்சை – விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பணிகள் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன. குறித்த பரீட்சையின் பெறுபேறுகளை 40 நாட்களுக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தரமேலும் படிக்க...
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதமொன்றை நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பு

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில்மேலும் படிக்க...
குரங்குகளின் அதிகரிப்பிற்கு மனிதர்களின் செயற்பாடே காரணம் – சூழலியல் நிபுணர் மெண்டிஸ் விக்ரமசிங்க

நாட்டில் மனிதர்களால் அதிகளவான உணவுகள் சூழலுக்கு விடுவிக்கப்படுகின்றமை குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பில் தாக்கம் செலுத்தியுள்ளதாக சூழலியல் நிபுணர் மெண்டிஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு இது தொடர்பில் கருத்துரைத்த அவர், பாரியளவில் உணவு விரயமாவதால் குரங்குகளின் தொல்லை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உணவுக்மேலும் படிக்க...
பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் ; ஹர்ஷ டி சில்வா

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்திடம் உள்ள திட்டம் என்னவென்பதை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வெற் வரி எவ்வாறு குறைக்கப்படும், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும்மேலும் படிக்க...
ரணிலும் சஜித்தும் சந்திப்பு – ஐ.தே.கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைய வேண்டும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தல்

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக்கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.அது தொடர்பில் நாம் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம். எதிர்காலத்தில் அந்த செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்மேலும் படிக்க...
செனல் – 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் முறையான விசாரணை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு மேலதிகமாக செனல் 4 தொலைக்காட்சியில் வெளியான ஆவணப்படத்தையும் அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கானமேலும் படிக்க...
அடுத்த வாரம் சீனா செல்கிறார் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 12 ஆம் திகதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் 2 ஆவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும். இந்த பயணத்தின் போது அவர் சீன ஜனாதிபதி மற்றும்மேலும் படிக்க...
எந்தவொரு அதிகார அரசியல் நகர்விலும் பங்காளியாகச் செயற்படேன் ; கரு ஜயசூரிய
நாட்டு மக்களின் நலனை இலக்காகக்கொண்டு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் தற்போது மிகுந்த அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு அப்பால், தாம் எந்தவொரு அதிகார அரசியல் செயற்பாடுகளுக்கும் தலைமைத்துவத்தை வழங்கப்போவதில்லை என அவ்வியக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஐக்கியமேலும் படிக்க...
ரஷ்ய படையில் இலங்கையர்கள் வலிந்து இணைப்பு குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் விரைவில் பேச்சு – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

ரஷ்யப்படையில் வடபகுதி இளைஞர்கள் வலிந்து இணைக்கப்பட்டுள்ளமை உட்பட இலங்கையர்கள் போரில் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பில் ரஷ்ய வெளிவிவார அமைச்சருடன் அமைச்சர் விஜித ஹேரத் விரைவில் உத்தியோகபூர்வமான பேச்சுக்களை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா போராட்டக்காரர்களுடனானமேலும் படிக்க...
Clean Sri Lanka வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் சிறிலங்கா அரசு முதலில் தன் மீது பதிந்துள்ள தமிழினப் படுகொலைக் கறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்-யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர்

Clean Sri Lanka வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் சிறிலங்கா அரசு முதலில் தன் மீது பதிந்துள்ள தமிழினப் படுகொலைக் கறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார் நீண்டகாலமாக விசாரணையின் பேரில்மேலும் படிக்க...
பல்கலை உப வேந்தர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

அரச பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களில் நிர்வாகச் சிக்கல்கள், கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் வெற்றிடங்கள், மாணவர்களின் குடியிருப்புப்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- …
- 441
- மேலும் படிக்க




