Author: trttamilolli
கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து: 3 பேர் பலி – நால்வர் காயம்

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் இன்று (7) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த நால்வரும் தற்போது வரக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
மனிதப் பயன்பாட்டிற்கு அனுமதியில்லாத மருந்து இணையத்தில் விற்பனை

பிரித்தானியாவில், உடல் எடையைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும், ரெட்டாட்ருடைட் (Retatrutide) என்ற, பரிசோதனை நிலையில் உள்ள மருந்து, சமூக ஊடகங்கள் மூலம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் இந்த மருந்து, பிரித்தானியாவில் இணையத்தளங்கள் மற்றும் சமூகமேலும் படிக்க...
தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க கனடா அரசாங்கம் புதிய குடிவரவுத் திட்டம்

கனடாவில் ஏற்கனவே தற்காலிகக் குடியிருப்பு அந்தஸ்துடன் வசித்து வரும் தகுதியுடைய 2 இலட்சம் பேருக்கு 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நிரந்தர வதிவிட அந்தஸ்து வழங்குவதற்கான புதிய குடிவரவுத் திட்டத்தை கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிப்பதுடன், குடிவரவு விண்ணப்பங்களின் நிலுவையைக்மேலும் படிக்க...
தமிழக நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்வனவில் பல கோடி முறைகேடு குற்றச்சாட்டு

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கத்தின் (பபாசி) பெயரில் ஆறு மாவட்ட நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக சில மாதங்களுக்கு முன்பே தமிழக அரசிடம் சிலா் முறைப்பாடு செய்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. கோவை பெரியாா் அறிவுலகத்துக்காக போலி பதிப்பகங்கள்மேலும் படிக்க...
வாடகைக்கு தங்கியவர் நடத்திய தாக்குதலில் வீட்டு உரிமையாளர் பலி

வாரியப்பொல, ஹல்மில்லேவ பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபர் ஒருவர் இன்று (7) அதிகாலை நடத்திய கூர்மையான ஆயுதத் தாக்குதலில் அவ்வீட்டின் உரிமையாளர் உயிரிழந்தார். சந்தேகநபர் வீட்டின் உரிமையாளருக்கு மேலதிகமாக அவரது மனைவி மற்றும் மகள் மீதும் தாக்குதல் நடத்திமேலும் படிக்க...
தீபாவளியை முன்னிட்டு வடக்கு தமிழ்ப் பாடசாலைகளுக்கு 9ஆம் திகதி விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திங்கட்கிழமை (9) வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துத் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் வழங்கப்படும் இந்த விசேட விடுமுறைக்கு ஈடுசெய்யும் வகையில், எதிர்வரும் 14ஆம்மேலும் படிக்க...
வரி நிவாரணம் மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு; ஜனாதிபதி அறிவிப்பு

2027 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் உழைக்கும் போது செலுத்தும் வரியை மேலும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்று வரும் தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
அன்டிகுவா விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஹரிணி

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் (CHOGM) 28 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக அன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய (07) ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பியுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தின் ஊடாகமேலும் படிக்க...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்

தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், விசேட பொதுப் போக்குவரத்துச் சேவைகள் இன்று (6) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, அதிகரித்துள்ள பயணிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு 200 இற்கும் மேற்பட்ட மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச்மேலும் படிக்க...
பிணை வழங்கியும் சிறையிலிருந்து வெளியேற முடியாத ரோஹித போகொல்லாகம

ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷந்த கொடவெலவினால் இந்த உத்தரவுமேலும் படிக்க...
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி குறித்த அச்சம் – உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகள் கடும் சரிவு

அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மந்தமடையக்கூடும் என்ற அச்சம் காரணமாக, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிவடைந்துள்ளன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றிபெற்றதைத்மேலும் படிக்க...
சீனாவைச் சார்ந்திருப்பதால் பிரிட்டனின் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தா

அரிய மண் கனிமங்கள் உள்ளிட்ட முக்கிய கனிமங்களின் விநியோகத்தில் சீனாவை அதிகளவில் சார்ந்திருப்பதால், பிரிட்டனின் பொருளாதார மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என அந்நாட்டு நாடாளுமன்றக் குழு எச்சரித்துள்ளது. பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள், மின்கலங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்மேலும் படிக்க...
ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒன்றிணையுங்கள் – பிரகாஷ் ராஜ் அழைப்பு

டெல்லி ஜந்தர் மந்தரில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட முயன்றது. அப்போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறி, சிஜேபி நடத்தவிருந்த போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் டெல்லியின்மேலும் படிக்க...
பிரான்ஸ் : நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் – 448 பேர் கைது, 53 காவல் துறையினர் காயம்

ஊதிய உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நவம்பர் மாதம் 5ஆம் திகதி வியாழக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் சுமார் 1.6 மில்லியன் பேர் பங்கேற்றதாக CGT தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், உள்துறைமேலும் படிக்க...
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – CPC அறிவிப்பு

நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சில நிறுவனங்களால் எரிபொருள் விநியோகத்தில் குறைபாடு காணப்படுவதாக அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்தார். இருப்பினும், இந்த நிலைமையை சீர்செய்வதற்காகமேலும் படிக்க...
வேலணை செட்டிபுலத்தில் உருக்குலைந்த நிலையில் இரு சடலங்கள் மீட்பு

வேலணை செட்டிபுலம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அவதானித்த அப்பகுதி மக்கள், இன்று (06) ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். மேலும் படிக்க...
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக SLFP இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தற்போது உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகக் கருதப்பட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அக்கட்சியின் தரப்பினருக்கு அறிவித்துள்ளது. அதற்கமைய, உத்தியோகபூர்வ தேர்தலை நடத்துதல் உள்ளிட்ட தேவையான அளவுகோல்களைப் பூர்த்தி செய்த பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல்மேலும் படிக்க...
சபாநாயகருக்கு எதிரான மனு – 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக பாராளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவினால் சபாநாயகருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பிலான மேலதிக பரிசீலனையை இந்த மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்தமேலும் படிக்க...
2026 நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு இல்லை

2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று (05) நடைபெற்ற, 2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் தொடர்பானமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- …
- 1,238
- மேலும் படிக்க

