Author: trttamilolli
இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ராஜினாமா

இத்தாலியில் மரியோ டிராகி பிரதமராக பதவி வகித்து வருகிறார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த ஆண்டு அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமனம் செய்யப்பட்டார். இத்தாலியில் பொருளாதார நிலை தற்போது மிகவும் மோசடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால்மேலும் படிக்க...
டிரம்பின் முன்னாள் மனைவி இவானா காலமானார்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி இவானா (73). இவர் நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்தார். டிரம்பின் முதல் மனைவியான இவானா 1992 ஆம் ஆண்டு டிரம்பிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார்.மேலும் படிக்க...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் விடுதலை

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து கடந்த 4-ந்தேதி 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் 26 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்குமேலும் படிக்க...
முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த மோடி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ந்தேதி கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு, மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். அதன்பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதா? என்பதை அறிந்து கொள்ள ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு நேற்று பரிசோதனைக்கு சென்றார்.மேலும் படிக்க...
இலங்கை வந்து பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவுக்கு காணாமல் போனவர்களின் உறவுகள் அழைப்பு!

அமெரிக்கா, இலங்கை வந்து இங்குள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் சரி செய்ய வேண்டும் என வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழர்களின் அரசியல் விருப்பத்திற்கு அமெரிக்கா வந்து தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.மேலும் படிக்க...
போராட்டக் காரர்களுக்கும், கிளர்ச்சிக் காரர்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது – பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

போராட்டக்காரர்களுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பதில் ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், ” நாம் வாழ்வதற்கும்,மேலும் படிக்க...
ஜூலை 14! – பிரான்ஸில் தேசிய நாள் நிகழ்வுகள்

மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு, மக்களாட்சி கொண்டுவரப்பட்ட தேசிய நாள் இன்று. ஜூலை 14, 1789 ஆம் ஆண்டு Bastille சிறைச்சாலை கிளர்ச்சியாளர்களால் உடைக்கப்பட்டு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அன்றைய நாளையே பிரான்சின் தேசிய நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. பரிசில் இன்று, தேசிய நாள்மேலும் படிக்க...
இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யா தான் பொறுப்பு- உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்கள் தடைப்பட்டதால் இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய முக்கிய தந்திரத்தில் ஒன்று பொருளாதார நெருக்கடி உருவாக்குவதாகும். விநியோகச் சங்கிலியில்மேலும் படிக்க...
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 1800 ஊழியர்கள் திடீர் நீக்கம்

உலகில் பெரிய நிறுவனமான மைக்ரோசாப்ட் கம்பெனியில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த நிறுவனம் தற்போது ஊழியர்களை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. மறுசீரமைப்பு காரணமாக 1800 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இருந்த போதிலும் தொடர்ந்து புதிதாக பணியாளர்கள்மேலும் படிக்க...
பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்து வருகிறது- கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பாலின இடைவெளியில் 146 நாடுகளில் இந்தியா 135-வது இடம் வகிப்பதாக 2022-ம் ஆண்டுக்கான உலக பாலின இடைவெளி குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலின சமத்துவம் ஏற்பட மேலும் 132மேலும் படிக்க...
மு.க.ஸ்டாலின் விரைவில் குணம் அடைய வேண்டும்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுமேலும் படிக்க...
நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என மஹிந்தவும், பசிலும் அறிவிப்பு

மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோர் நாளை வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள் என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் எஸ்.ஆர். ஆட்டிகல உள்ளிட்டோருக்கு வெளிநாடு செல்ல தடைமேலும் படிக்க...
ஜனாதிபதியாக சஜித்தும் பிரதமராக அனுர குமாரவும் நியமிக்கப்பட வேண்டும்

சர்வ கட்சி அரசாங்கத்தில் புதிய ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸவும், பிரதமராக அனுர குமார திஸநாயக்கவும் நியமிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
அனைத்து தரப்பினரும் இணக்கப் பாட்டுடன் செயற்பட வேண்டும் – ஐ.நா வலியுறுத்து

அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அன்டானியோ குட்டாரஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும் இணக்கப்பாட்டுடன் சமாதானமான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில்மேலும் படிக்க...
நாட்டில் சட்டவாட்சியை உறுதிப் படுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்து!
நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங்(Julie Chung) தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து வகையான வன்முறைகளையும் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீண்ட கால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்காக அனைத்துமேலும் படிக்க...
ரணில் விக்கிரம சிங்கவிற்கு ஜனாதிபதியின் அதிகாரங்கள் – வெளியானது வர்த்தமானி

ஜனாதிபதியின் அதிகாரங்களை ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கும் வகையில் அதி விசேட வர்த்மானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) முதல் அமுலுக்கும் வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஜனாதிபதியின் கடமைகள் மற்றும்மேலும் படிக்க...
நாடாளு மன்றத்தினை நோக்கி நகரும் போராட்டக் காரர்கள் – பாதுகாப்பினை பலப்படுத்த நடவடிக்கை

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்காக இராணுவ கமாண்டோக்கள் குழுவொன்று வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தை அண்மித்த பொல்வதுவ சந்தியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- …
- 744
- மேலும் படிக்க