Main Menu

வரி நிவாரணம் மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு; ஜனாதிபதி அறிவிப்பு

2027 வரவு செலவுத் திட்டத்தின் மூலம்  உழைக்கும் போது செலுத்தும் வரியை மேலும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்று வரும் தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

எமது ஆட்சியின் ஊடாக ஒரு இலட்சம் ரூபாய் ஊதியம் பெறுவோருக்காக அறவிடப்பட்ட உழைக்கும் போது செலுத்தும் வரியை ஒரு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுவோருக்காக மாத்திரம் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம்.

அந்த மட்டத்தை எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் மேலும் உயர்த்தி சலுகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை 2027 வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான அத்தியாவசிய கொடுப்பனவுகளை நூறு சதவீதம் அதிகரிகப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

பொது அரச சேவையாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தின் அடுத்த கட்டம் வரவு செலவு திட்டத்தின் ஊடாக அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னர் சிலர் கொடுப்பனவுகள் தொடர்பில் பேசுவதற்கு ஆரம்பித்துள்ளனர்.

எனினும் அத்தியாவசிய கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சில கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படமாட்டாது.

2028 ஆம் ஆண்டில் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான எவ்வித தேவைப்பாடுகளும் இல்லை என்பதால், அதன்போது கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தொிவித்தார்.