பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு இருவர் காயம்
பத்தேகம பகுதியின் ஹல்படோட்டா (Halpatota) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது, காரில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் பலத்த காயமடைந்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் தகவலின்படி, தாக்குதலாளிகள் T-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்திய இந்தச் சூட்டுச் சம்பவத்தில், வீட்டில் இருந்த ஒரு ஆணும் பெண்ணும் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தச் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்கவும், இதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காணவும் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
