வடக்கு கரையில் பெரும் தொகையான போதைப்பொருள் மீட்பு
இலங்கை கடற்படையினர் இன்று (27) அதிகாலை யாழ்ப்பாணம் மாதகல், குசுமன்துறை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது போதைப்பொருள் தொகையொன்றைக் கைப்பற்றியுள்ளனர்.
வடக்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான படகுப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படை கப்பல் அக்போ நிறுவனத்தின் பணியாளர்களால் இன்று அதிகாலை ஆரம்பிக்கப்பட்ட இந்நடவடிக்கையின் போது இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட சட்டவிரோதப் பொருட்கள் தொடர்பில் கடற்படையினர் தற்போது அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
