வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் கைது
இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட் தொகுதியுடன் இரண்டு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று (27) கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 14,000 சிகரெட்டுகளைக் கொண்ட 70 பெட்டிகளும், 18,000 சிகரெட்டுகளைக் கொண்ட மேலும் 90 பெட்டிகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் 36 மற்றும் 56 வயதுடைய சீனப் பிரஜைகள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
