இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கத்தால் இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, மேல், சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில பகுதிகளில் சுமார் 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
