Main Menu

அகற்றப்பட்ட திலீபனின் திருவுருவச் சிலை!

யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள திலீபன் நினைவாலயப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலை, யாழ்ப்பாண பொலிஸாரால் அகற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் இன்று (27) காலை 6.00 மணி முதல் 6.30 மணிக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.

நேற்று (26) இதே நினைவிடத்தில் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றதையும், அங்கு திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டும் இருந்தது.

இந்த நிலையில், பொலிஸாரின் திடீர் நடவடிக்கையைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

May be an image of one or more people and text

May be an image of text

No photo description available.