Main Menu

ஆய்வக ஆண் நுளம்புகளைப் பொதுவெளியில் விட அனுமதி கோரும் Google

கலிபோர்னியா மற்றும் புளோரிடா மாகாணங்களில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 3.2 கோடி ஆண் நுளம்புகளைப் பொதுவெளியில் விடுவதற்கு அமெரிக்க அரசாங்கத்திடம் Google நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.

இந்த ஆய்வக ஆண் நுளம்புகள் பொதுவெளியில் உள்ள பெண் நுளம்புகளுடன் இணையும் போது உருவாகும் முட்டைகள் பொரிக்காது.

இதன் மூலம் நுளம்புகளின் எண்ணிக்கை காலப்போக்கில் பெருமளவில் குறைக்கப்பட்டு, டெங்கு மற்றும் ஜிகா போன்ற ஆபத்தான நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.